கமல்ஹாசன் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’.
பல பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பணிபுரியும் கிரேக்மேன் (CRAIGMAAN) என்பவர் ஆஸ்கர் விருது பெற்று உத்தம வில்லன் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து முடிந்துள்ளது.
இவ்விழாவில் சிறந்த சவுன்ட் மிக்சிங் கலைஞருக்கான விருது ‘WHIPLASH’ என்ற படத்தில் பணிபுரிந்த கிரேக்மேன் (CRAIGMAAN) பெற்றுள்ளார். இவர்தான் ‘உத்தம வில்லன்’ படத்திலும் சவுன்ட் மிக்சிங் வேலைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘உத்தம வில்லன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படம் ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

No comments:
Post a Comment