வருடா வருடம் பட்ஜெட் தாக்கலின் போது நடுத்தர மாதச் சம்பளம், வாங்குவோரின் மனதில் ஓடுவது இதுதான். இந்த வருஷமாகவது வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்குமா…
இந்த வருடத்திற்கான பட்ஜட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடந்து கொண்டு வருகிறது. பட்ஜெட் கூட்டுத் தொடர் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது.
இதில், பட்ஜட்டில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் திருடப்பட்ட விஷயம் கடுமையாக விவாதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இந்த வருடத்துக்கான பட்ஜெட் வரும் 28ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சென்ற வருடம், ப.ஜ.க., ஆட்சி அமைத்த உடன் ஜூலை 10ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடந்தது. நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டான இதில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
அதோடு, சேமிப்புகள் உள்ளிட்ட 80-சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகையின் உச்சவரம்பும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1.5 லட்சமாக அதிக்கப்பட்டது.
வீட்டுக் கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார் அருண் ஜெய்ட்லி. இதை அடுத்து இந்த வருடம் நடை பெற இருக்கும் 2015-16க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட இருக்கிறது.
இது தான் பா.ஜ.க.,வின் முதல் முழு பட்ஜெட். எனவே இந்த பட்ஜெட்டில் வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரணம், நடுத்தர மக்களின் வாக்குகளையும், தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடக்க இருக்கும் சட்ட மன்றத் தேர்தலுக்கும் இந்த பட்ஜெட் சலுகைகள் கவருவதாக அமையும் என்பதால் இந்த முறை கண்டிப்பாக மாற்றம் ஏற்பட வாய்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

No comments:
Post a Comment