ஐசிசி உலகக் கோப்பை 2015 போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்து விட்டது. இன்று ஐசிசியின் நிர்வாகக் குழுக் கூட்டம் மெல்போர்னில் நடைபெறுகிறது.
இதில் 2019 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் 14 அணிகளுக்குப் பதிலாக 10 அணிகளாகக் குறைப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் போட்டி பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் விருவிருப்பாகவும் இருக்கும் என்று ஐசிசி சார்பில் கூறுகின்றனர்.
ஐசிசியின் இந்த முடிவால் வளர்ந்துவரும் அணியினர் பீதியில் இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், கடந்த சில வருடமாக அயர்லாந்து, நெதர்லாந்து, யூஏஇ என புதிய அணிகள் தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment