Sunday, 22 February 2015

ஆஸ்கார் விருதை கழிவறையில் வைத்திருக்கும் நட்சத்திரங்கள்…!


87 வது ஆஸ்கார் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. சினிமா துறையில் அதிக புகழ்பெற்ற விருதாக ஆஸ்கார் விருது விளங்குகிறது.
முக்கியமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆங்கில மொழி திரைப்படங்களுக்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டாலும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதையாவது வென்றுவிட வேண்டும் என்பது பல நாடுகளின் திரைப்படத்துறையினரின் கனவாக உள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் பலர் ஆஸ்கார் விருது சிலையை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தொடர்பில் சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைட்டானிக் புகழ் நடிகையான கேட் வின்ஸ்லெட்டுக்கு 2008 ஆம் ஆண்டு 'தி ரீடர்' படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அவர் கழிவறையிலேயே ஆஸ்கார் விருதுச் சிலையை வைத்துள்ளாராம்.
"ஆஸ்கார் சிலையை பலரும் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள். "அதை தூக்கிவைத்துக்கொண்டு, " ஓ.. எவ்வளவு பாரமாக இருக்கிறது" என்பார்கள். கழிவறையில் சிலையை வைத்தால் இவையெல்லாம் தவிர்க்கப்படும் என எண்ணினேன்" என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கேட் வின்ஸ்லெட்.
சீன் கெனரி, எம்மா தொம்ஸன் தனது வீட்டின் கழிவறையில் இவ்விருதை வைத்துள்ளாராம். சுசான் சரன்டன், லயனல் ரிச்சி ஆகியோரும் ஆஸ்கார் விருதுச் சிலையை வைப்பதற்காக கழிவறையை தேர்வுசெய்த நட்சத்திரங்களாவர்.
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற நடிகை ஜொடீ பொஸ்டர் முதலில் குளியலறையில் வைத்திருந்து பின்னர் விருதுகளை வைப்பதற்கான பெட்டியொன்றுக்கு அவற்றை மாற்றினாராம். நடிகை ரீஸ் விதர்ஸ்பூன் வீட்டின் வரவேற்பறையில் இச்சிலையை வைத்துள்ளார்.
நடிகர் ஜோர்ஸ் குலூனி தனது வீட்டிலுள்ள நூலகத்தில் இச்சிலையை வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டின் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்ற ஜெனிபர் லோரன்ஸ் தனது பெற்றோரின் பியானோவின் மேல் இச்சிலையை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment