தனது இறந்த மகளின் கருமுட்டைகளை பயன்படுத்தி தனது பேரக்குழந்தையை தனது கருவில் சுமக்க அனுமதிக்க கோரி பெண்ணொருவர் வழக்குத் தாக்கல் செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இத்தகைய வழக்கொன்று தாக்கல் செய்யப்படுவது உலகில் இதுவே முதல் தடவையாகும். பெயர் வெளியிடப்படாத 59 வயது பெண்ணே தனது இறந்த மகளின் இறுதி விருப்பத்தின் பிரகாரம் அவரது கருமுட்டைகளையும் தானமாக பெற்ற விந்தணுக்களையும் பயன்படுத்தி தனது பேரக் குழந்தையை கருவில் சுமக்க அனுமதி கோரியுள்ளார்.
அந்த பெண்ணின் ஒரேயொரு பிள்ளையான மகள் சுமார் (20 வயது) 4 வருடங்களுக்கு முன் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை அறிந்தவுடன் மேற்படி மகள் தனது கருமுட்டைகளை எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய விதத்தில் உறை நிலையில் பேண ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி நியூயார்க் நகரிலுள்ள மருத்துவமனையில் 60000 ஸ்ரேலிங் பவுண் செலவில் இனவிருத்தி சிகிச்சையை மேற்கொள்ள அந்தப் பெண்ணின் தயார் எதிர்பார்த்துள்ளார்.
ஆனால் மேற்படி கருத்தரித்தலானது அவரதும் அவர் சுமக்க இருக்கும் குழந்தையினதும் உயிருக்கும் ஆபத்தாக மாறலாம் என அஞ்சப்படுகிறது.

No comments:
Post a Comment