Sunday, 22 February 2015

சுவிஸ்ஸில் இஸ்லாமிய சட்டங்களை திணிக்க முயற்சியா…??


சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியச் சட்டங்களை திணிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக, கேண்டன் ஆஃப் வேலியஸ் (Canton of Valais) பகுதியின் இணையதளம் ஒன்று கூறியுள்ளது.
சுவிஸ்ஸின் சட்ட திட்டங்களுக்கு எதிராக, முகம் மற்றும் உடலை மறைக்கு பர்கா உடை அணிவது உள்ளிட்ட ’ஷா’ எனப்படும் இஸ்லாமிய சட்டங்களை சுவிஸ்ஸில் திணிக்க சில இஸ்லாமிய அமைப்புகள் முயற்சி செய்து வருவதாக இந்த இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பில், இஸ்லாமியர்களின் பாரம்பரியமான பர்கா மற்றும் நிகாபாக்களை சுவிஸ்ஸில் அணிவதற்கு, 60 சதவீத சுவிஸ் மக்கள் எதிர்பு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ்ஸில் இஸ்லாமியர்கள் பர்கா விதிப்பதற்கு பலரும் எதிர்பு தெரிவித்து, கடந்த 2013ம் ஆண்டு சுவிஸ்ஸின் டிசினோ மாகாணத்தில் பொது இடங்களில் பர்கா போடக்கூடாது என்று நீதிமன்றத் தடையைப் பெற்றனர்.
இதே போல், கடந்த வெள்ளிக் கிழமை வேலியாஸ் மாகாணத்தில், பள்ளிகளில் பர்கா அணிந்து வருவதைத் தவிற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர், சிலர். ஆனால், இந்த நடவடிக்கைக்கு கூடிய பலன் கிட்ட வில்லை.
இந்த தடையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வில்லை. மேலும், டிசினோவில் நடைமுறையில் உள்ள பர்கா தடையால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுவிஸிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக சுவிஸ் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment