உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் தனக்கு திருப்திகரமாக இல்லை என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ஆடியுள்ள இரண்டு ஆடத்திலுமே இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளை வீழ்த்தியுள்ளது.
இது குறித்து இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறுகையில், ’இந்திய அணியின் இந்த வெற்றிகள் எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் திருப்திகரமாக இல்லை. இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனினும் இதனை நமது அணி தக்க வைக்கும் வரை எனக்கு திருப்தியாக இருக்காது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து வரும் போட்டிகளிலும் இதே ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
அதே போல ரஹானேவும் சிறப்பாக செயல்படுகிறார்.’ என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment