Tuesday, 24 February 2015

அப்படி நடிப்பியா..? நடிகைக்கு கொலை மிரட்டல்...!


தமிழில் விஜயகாந்த் ஜோடியாக கஜேந்திரா, கார்த்தி, பிரபு நடித்த குஸ்தி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் புளோரா. இந்த படங்களுக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதும் வரவில்லை என்றாலும் அப்போ அப்போ ஒரு சில படங்களில் நடித்து நான் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்துவார்.
அப்படிதான் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் மெசஞ்சர் ஆப் காட் . இந்தப் படம் ஹரியானா மற்றும் சண்டிகரில் சமீபத்தில் வெளியானது.
இதற்கு சீக்கியர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த படத்தில் புளோரா மனித வெடி குண்டாக நடித்திருந்தார். மதங்களை விமர்சிக்கும் இந்தப் படத்தில் பெண் தீவிரவாதியைப் போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த கேரக்டரில் நடித்த புளோராவுக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.
மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்திருந்தனர். தற்போது அவருடைய மொபைல் போனிற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றதாம். இதனால் பயந்துபோன புளோரா போலீசில் புகார் செய்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை. எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment