எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னுதான் எல்லோரும் நினைப்பார்கள், ஆசைப்படுவார்கள். ஆனால், இன்றைய உலக சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் நாம் டென்ஷனாகவே சுற்றுகிறோம்.
ஃப்ரீயா இருக்கும் போது, படத்துக்கு போறோம், பிடித்த உணவுகளை சாப்பிடுகிறோம், இயற்கையை ரசிக்கின்றோம். இதெல்லாம் அவங்க அவங்க ரசனையைப் பொறுத்தது. ஆனால், சில உணவுகளை சாப்பிடும் போது அது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைக்கின்றதாம். தெரியுமா??
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் அதைப்பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
காஃபி:
நாளொன்றுக்கு 4 அல்லது அதற்கு அதிகமான கப்புகள் காஃபி குடிப்பது உங்களை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் என ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
சாக்லேட்:
பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது நல்ல பழக்கம்தான். ஏனெனில், டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு மிக நல்லது எனபது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள அதிகபடியான விட்டமின் சி, எண்ட்ரோஃபின் மற்றும் இருப்புச் சத்தினை அளிப்பதுடன், இதன் சிகப்பு நிறமே மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும். மேலும் இதன் இயற்கையான இனிப்பு சுவை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என ஆய்வுகள் கூறுகின்றது.
ஐஸ் க்ரீம்:
ஐஸ் க்ரீம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பொதுவாகவே ஐஸ் க்ரீம் சாப்பிட போகின்றோம் என்றாலே பலர் குஷியாகி விடுவார்கள்.
சாலட்:
பழம் அல்லது காய்கறி சாலட் தினமும் ஒரு வேளையாவது உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பழங்களில் மூன்று வகை பழங்களையாவது எடுத்துக் கொள்ளவேண்டுமாம்.

No comments:
Post a Comment