ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கற்பழிப்பு வழக்கில் கைதான ஒரு ஆசாமியை விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
நொகுச்சி என்ற அந்த ஆசாமி, மருத்துவ ஆய்விற்காக உறங்கும்போது இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதாக சொல்லி மருத்துவத்துறையில் ஆர்வமுள்ள பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று நொகுச்சி மயக்க மருந்து கொடுத்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும், அந்த காட்சிகளை வீடியோ படம் எடுத்து, அதனை இணைய தளங்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சுமார் 52 லட்சம் ரூபாய்களை சம்பாதித்துள்ளான்.
54 வயதாகும் நொகுச்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகம் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment