ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ’என்னை அறிந்தால்’.கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படம் முதலில் பொங்கலுக்கு வெளிவரும் வரும் என அறிவிக்கப்பட்டது.
பின் ஒரு சில காரணங்களால் ஜனவரி 29 வெளிவரும் என கூறப்பட்டது. மீண்டும் படவேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால் ஒரு வாரம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வந்தது.
மேலும் சென்சாரில் யு/ஏ சான்று வாங்கியதால் படக்குழுவினர் மீண்டும் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி மறு தணிக்கை பெற இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் படம் சொன்னத் தேதியில் ரிலீஸாகுமா..? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு என்னை அறிந்தால் படத்தை பற்றிய ஒவ்வொரு தகவல்களாக வெளியிட்டு எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்தது மீடியாக்கள்.
இந்நிலையில் தற்போதைய செய்தி என்னவென்றால் என்னை அறிந்தால் படத்தின் சென்ஸார் சான்றிதழில் 2 மணி 56 நிமிடம் படம் ஒடும் என தகவல் வெளிவந்தது. ஆனால், அருண் விஜய் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘2 மணி நேரம் 42 நிமிடங்கள் உங்களை மெய்மறக்கச் செய்யவிருக்கும் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ரசிகர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தில் சில காட்சிகளை கெளதம் மேனன் நீக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment