Friday, 20 February 2015

துபாய் டார்ச் டவரில் திடீர் தீ…!! உண்மையிலேயே ‘தீ’ தாங்க..!!


துபாயின் டார்ச் டவர்ஸ் உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்று. 1,105 அடி உயரத்தில் நிற்கும் இது 79 அடுக்குகள் கொண்ட ஒரு குடியிருப்புக் கட்டிடம். அதாவது அபார்ட்மெண்ட்ஸ். உலகின் உயரமான அபார்ட்மெண்ட்ஸ்ல ஒன்றான இந்த டார்ச் டவர்ஸில், இன்று அதிகாலை சுமார் 2.00 மணி அளவில் தீ ஏற்பட்டுள்ளது.
சில மணித்துளிகளிலேயே 15 மாடிகள் வரை பரவியுள்ளது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், உடனடியாக, கட்டிடத்தில் குடியிருந்த 2000 மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றினர். கட்டிடத்தின் 51வது மாடியில் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
2 மணி முதல் மாலை 4:30 மணி வரை போராடி மீட்புப் படையினரும் தீயனைப்பு வீரர்களும் இந்த தீயை கட்டுக் குள் கொண்டுவந்துள்ளனர். அண்மையில், தான் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவில் தீப்பிடித்ததாக டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வதந்திகள் பரவின.
இதற்கிடையில், துபாயின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவரில் இன்று அதிகாலை நடந்த இத்தீவிபத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment