விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.
சிம்புதேவன் இயக்கிவரும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. அங்கு விஜய், ஸ்ருதிஹாசனின் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் வழக்கம் போல், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்தார் விஜய். அதன்படி, நேற்று இந்த தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
படக்குழுவினர் 700 பேருக்கும் தனது கைப்பட பிரியாணி பரிமாறி சாப்பிட வைத்தார் விஜய். லைட்மேன்கள், துணை நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் நடிகர்கள், டிரைவர்கள், உதவி இயக்குநர்கள் உள்பட பலரும் விருந்து சாப்பிட்டார்கள். பின்னர் அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார்.
ஏற்கனவே கத்தி படப்பிடிப்பின் போதும் விஜய் இதே போல் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment