Friday, 20 February 2015

நரை முடிக்கு என்ன செய்யலாம்??


பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளில் இளநரையும் ஒரு முக்கிய பிரச்சனை.
பொதுவாக இந்த பிரச்சனை உடலில் சத்துக் குறைவாக இருப்பதால் ஏற்படும் ஒரு பிரச்சனையாக தான் இருக்கும். அதன் பிறகு நீங்கள் அந்த சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் கூட, அது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போலத்தான். சரி, அப்போ இதற்கு என்னதான் தீர்வு???
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் நாம் அதைதான் பார்க்கப் போகின்றோம்…
இஞ்சியை துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து நரைத்த முடியில் தடவி, 10 நிமிடம் கழித்து குளித்து வரவேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
அதேபோல, வாரம் ஒருமுறை செம்பருத்தி இலை மற்றும் பூ இரண்டையும் அரைத்து, தலையில் தடவி ½ மணிநேரம் கழித்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
தயிர் மற்றும் மருதானிப் பொடியை சரிசமாக சேர்த்து தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்யது வர நரைமுடி மறையும்.
நீரில் சிறிது மிளகை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த நீரை தலையில் ஊற்றி மசாஜ் செய்து, பின்னர் அலசி வரவும்.
ப்ளாக் டீ அல்லது காஃபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலையில் தடவி மசாஜ் செய்து குளித்து வர நரை மறையும்.

No comments:

Post a Comment