Friday, 20 February 2015

ஜெ.,வின் அரசியல் வாழ்கையை தீர்மானிக்கும் தீர்ப்பு எப்போது…??


18 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த வருடம் 2014, செப்டம்பர் 27ம் தேதி தீர்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்த இந்த தீர்பு, அவரது முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியையும் பறித்தது. இவ்வழக்கு மீதான மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
20ம் தேதியான நேற்றோடு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் தரப்பிலான இறுதி வாதங்கள் நிறவடைந்தன. இதை அடுத்து அரசு தரப்பிலான இறுதி வாதம் தான் பாக்கி. இந்த வாதமும் முடிந்தால் உடனே தீர்பு தான்.
இந்த தீர்பும் ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்தால், அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு அரசியல் பக்கம் தலைவைத்து கூட படுக்க முடியாது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். சொத்து குவிப்பு வழக்கில், 6 தனியார் நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வாதம் செய்தன. இதற்கு நீதிபதி, தீர்பு வழங்கப்பட்டு 4 மாதங்கள் ஆன போதும், நிறுவனங்களின் சொத்துக்களை முடக்காதது ஏன் என்று பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு வழக்கை மட்டுமே தம்மை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டு, நிறுவனங்கள் தம்மை வழக்கிலிருந்து நீகக் கோரிய மனுவை நிராகரித்தார்.
இதை அடுத்து, அரசு தரப்பு இறுதிவாதங்களுக்கு 5 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கோரியிருக்கிறார். இதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு தரப்பு இறுதி வாதத்தை தொடங்க 4 நாட்களாவது அவகாசம் கேட்டுள்ளார். இதனடிப்படையில் பார்க்கும் போது, அடுத்த வாரம், அரசு தரப்பு இறுதி வாதங்களும் முடிவடையும்.
இது முடிவடைந்தால், அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்பு மீதான மேல் முறையீட்டு வழக்குக்கு தீர்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்பு தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்கையையே தீர்மானிக்கும் என்பதால், அ.தி.மு.க.,வினரும், அரசியல் வட்டாரங்களும் இந்தத் தீர்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment