டென்மார்க்கில் கோபன்ஹேகனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதுகாப்பு படை அதிகாரியான டான் உஸனின் மரணச்சடங்கு புதன்கிழமை இடம்பெற்ற போது, அந்நிகழ்வில் கலந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் ஹெல்லி தோர்னிங் - ஸ்கமிட் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. கோபன்ஹேகனிலுள்ள யூத மயானத்தில் இடம்பெற்ற உஸனின் மரணச்சடங்கில் பிரதமருடன் நீதி அமைச்சர் மெட் பிரெடிறிக்ஸனும் கலந்து கொண்டார்.
ஓமர் அப்டெல் ஹமீட் எல்-ஹுஸைன் (22 வயது) என்ற துப்பாக்கி ஏந்திய நபர்களால் உஸன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். தொடர்ந்து போலிஸார் மேற்கொண்ட தேடுதலையடுத்து ஓமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

No comments:
Post a Comment