தேசிய பெரும்பான்மை சிங்களக் குழு, இலங்கையின் புதிய பிரதம் ரணில் விக்ரமசிங்க மீது காவல்துறை முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளது. இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான தி ஹிந்து குழுமத்தின் பதிப்பு ஃப்ரண்ட் லைன்.
இது இலங்கையிலும் வெளியிடப்படுகிறது. இந்த பிப்ரவரி 6ம் தேதி இலங்கியில் வெளியாக இருந்த இந்தப் பத்திரிகையின் 30வது பதிப்பௌ, தேசிய பாதுகாப்பிற்கு எதிரானது என்று கூறி இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தடை செய்தது.
இவ்விதழில், 1987ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனனுடனான ஒரு சந்திப்பு மற்றும் நேர்காணல் பதிக்கப்பட்டிருந்தது. இதனால், இது கடந்த கால, உள்நாட்டுப் போரை நினைவு படுத்துவதாகவும், தேசிய பாதுகாப்பை சீர்குலைப்பதாகவும் அமையும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சுமத்தியது.
இதை அடுத்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், பத்திரிக்கையின் 30வது பதிப்பு முற்றிலுமாக விற்பனைக்கு வராவிடாமல், இலங்கை கட்டுநாயக்க சுங்கப் பிரிவு தற்காலிகத் தடை செய்தது.
இந்நிலையில், இந்த நேர்காணல் வெளியிடப்படுவதால் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்து இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பத்திரிக்கையை வெளியிட அனுமதி அளித்தார்.
இந்த செயலிற்கு, தேசிய பெரும்பான்மை சிங்களக் குழு எதிர்பு தெரிவித்ததுடன், காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளது. தேசிய பெரும்பான்மை சிங்களக் குழுவின் பொதுச் செயலாளர் மதில்ல பன்னலோக, இப்புகாரை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
இந்த புகார், தீவிரவாத விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகாரில், விக்ரம சிங்க, இலங்கையின் வடக்கு பகுதியில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளார் என்றும், ராணுவப் பாதுகாப்பில் இருந்த சுமார் 1000 ஏக்கர் நிலங்களை பாதுகாப்பில் இருந்து விலக்கி உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன் ஆட்சியில் இருந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, இலங்கையில், உள்நாட்டுப் போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்திருந்தது.
இந்த தடைகளை, மைத்திரி பால சிறீசேன தலைமையிலான அரசு, விலக்கியது. அதோடு, வடக்கு பகுதியில், தனியார் நிலங்கள் ராணுவத்தின் வசம் இருந்தன. புதிதாக பதவியேற்ற மைத்திரி அரசு, இந்த நிலங்களில் இருந்து ராணுவத்தினரை அப்புறப்படுத்தியது.

No comments:
Post a Comment