‘எதிர்நீச்சல்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில் குமாரும், சிவகார்த்திகேயனும் இணைந்துள்ள படம் காக்கி சட்டை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘காக்கி சட்டை’யை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் உலகம் முழுக்க வெளியிடுகிறார்.
வருகிற 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தை புரோமோட் செய்யும் விதமாக நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் காக்கி சட்டை படக்குழுவினர். இதில் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனிடம் இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தபோது எப்படி ஃபீல் பண்ணினீங்க? என்று கேட்டபோது, ‘‘உண்மையிலேயே இப்படத்திற்காக காக்கி சட்டையை போட்டதும் என் அப்பா ஞாபகம் வந்து என்னை ஃபில் பண்ண வச்சது. அப்பா நான் சாதாரண ஒரு போலீஸ் காரனாக வருவதை விட ஐ.பி.எஸ்.
படித்து பெரிய போலீஸ்காரனாக வரவேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இப்படத்தில் நான் போலீஸ்காரராக நடித்ததன் மூலம் ஒரு சிறிய மனதிருப்தி கிடைச்சிருக்கு. ‘காக்கி சட்டை’யில் என்னை பார்த்த என் அம்மாவுக்கும் அப்பாவுடைய நினைவுகள் வந்தது.
ஆனால் அதை அவர் அதிகமாக வெளிகாட்டிக்கவில்லை’’ என்றவாறு கண்கலங்கினார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ்காரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment