Friday, 20 February 2015

உலகக் கோப்பை போட்டி: பரிதாமாக தோற்றது பாகிஸ்தான்!!!


உலகக் கோப்பை போட்டி தொடரின் 10 வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல் மற்றும் சுமித் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது.
311 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் அந்த அணி 39 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமாக தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அக்மல் 59 ரன்களும், மக்சூட் 50 ரன்களும் எடுத்தனர்.
இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள இவ்விரு அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் இன்று நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஆஸி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. ஆனால் இந்தப் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment