Friday, 20 February 2015

டேய் தம்பி என்கிட்ட இருந்து உனக்கு போன் வரும்.. நான் சொன்னத செய்வேன் தெரியும்ல..


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ன் இறுதிச்சுற்று நேற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், மனோ, சித்ரா, சுபா, மாணிக்க விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கே.வி.ஆனந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் முதல் ஆறு இடங்களை பிடித்த பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. ஓவ்வொருத்தரும் போட்டி போட்டு பாடி ரசிகர்களை மட்டுமில்லாமல், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பார்களையும் வெகுவாக கவர்ந்தனர்.
இந்த ஆறு பேரில் யார் பட்டத்தை வெல்லப்போகிறார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும், சில சுவாரஸ்யமான விஷயங்களும் நடந்தது. அதாவது இறுதி சுற்றுக்கு வந்திருக்கும் 6 போட்டியாளர்களில் ஒரே ஒரு ஒரே ஆண் போட்டியாளர் பரத். கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இவர் ஒரு சில கஷ்டமான பாடல்களை பாடி நிகழ்ச்சி நடுவர்களை அசர வைத்துவிட்டார்...
அதோடு சிறப்பு அழைப்பாளரான தனுஷையும் கவர்ந்துவிட்டார். இதனால் அவருக்கு தனுஷ் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று இறுதி சுற்றில் விண்ணைத்தாண்டி வருவாய படத்தில் இடம்பெற்ற ’ஆராம்மலே ’பாடலை பாடி அசத்தினார் பரத். இதை பார்த்து அசந்துபோன தனுஷ், ’டேய் தம்பி என்கிட்ட இருந்து உனக்கு போன் வரும் தயாரா இரு என்றார். பிறகு நான் சொன்னத செய்வேன் தெரியும்ல நீ என் படத்தில கூடிய சீக்கிரம் பாடுவ’ என்று கூறினார்.
பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தனுஷ் படத்தில் பாடும் வாய்ப்பை பெற்றுவிட்டார் பரத்.

No comments:

Post a Comment