Friday, 20 February 2015

இரு தடவைகள் கற்பழிக்கப்பட்டதை அறியாத பெண்….!


லண்டனில் பெண் ஒருவர் ஒரே இரவில் இரு தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனக் கூறியுள்ளார். அதிக மதுபோதையில் அப்பெண் இருந்தமையே இதற்குக் காரணம்.
நோர்வேயை சேர்ந்த சுற்றுலா பயணியான 23 வயதான பெண் ஒரே இரவில் இரு வேறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இவ்விரு வன்முறைகளும் லண்டனின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதான மொரிஸ் ஸ்டாகெல், 39 வயதான அப்தாப் மொஹமட் ஆகிய இருவரும் இக்குற்றத்தை புரிந்ததாகவும் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற நபர்கள் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி பெண் வீடு திரும்புவதற்கு உதவுமாறு மேற்படி நபர்களிடம் கேட்டபோதே அவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருப்பதாக போதையில் எண்ணிய இந்த பெண்ணை ரயில்நிலையம் ஒன்றுக்கு அழைத்துச்சென்று அவரை அடித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மொரிஸ் ஸ்டாக் கிள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பின்னர் இச்சம்பவம் குறித்து லண்டன் போலிஸாரிடம் மேற்படி பெண் புகார் செய்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகள் மூலம் மேற்படி பெண் இரு நபர்களால் வல்லுறக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரிய வந்தது.
ஆனால், தனக்கு இவ்வாறான சம்பவம் நடைபெற்றமை தெரியாது என அப்பெண் கூறினார். மரபணு பரிசோதனை அடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார், வாடகைக் கார் ஓட்டுநரான அப்தாப் மொஹமட்டை கைது செய்தனர். இந்த பெண் தனது காரில் லிப்ட் கேட்டதாக போலிஸாரிடம் அப்தாப் மொஹமட் கூறியுள்ளார்.
"வாடகைக் காரில் லிப்ட் கொடுப்பதற்கு அனுமதியில்லை என்றபோதிலும் தான் பின்னர் அவரை ஏற்றிச்சென்றதாகவும் இதன்போது பாலியல் உறவுகொள்ள விரும்புவதாக இந்த பெண் கூறினார் எனவும் அதன்பின் தான் பாலியல் உறவுகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு விசாரணை தொடர்கிறது.

No comments:

Post a Comment