Thursday, 19 February 2015

சிவன், பார்வதி தான் முஸ்லீம்களை படைத்தவர்கள்!! சொன்னதே முஸ்லீம் தாங்க!!


ஜாமியத் உலெமா அமைப்பைச் சேர்ந்த முஃப்தி முகமது என்பவர், இந்துக் கடவுளான சிவன் முஸ்லீம்களின் முதல் தீர்க்கதரிசி என்றும், சிவனும் பார்வதியும் தான் முஸ்லீம்களை படைத்தவர்கள் என்று சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டுள்ளா.
வர இருக்கும் பிப்ரவரி 27ம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பால்ராம்பூரில் சமூக நல்லிணக்க மாநாடு ஒன்று நடக்க உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள துறவிகளை அழைக்கும் விதமாக, ஜாமியத் உலெமா அமைப்பினர் அயோத்தி சென்றனர்.
அயோத்தியில் பேசிய ஜாமியத் உலெமா அமைப்பின் முப்தி முகமது இலியாஸ்,
”முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன் ஆவார்.”
“முகமதியர்களான நாங்கள், சனதான தர்மத்தை பின்பற்றுகிறோம்.”
”எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான்.”
”இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.”
”சீனா மற்றும் ஜப்பானில் உள்ள மக்களை சீனர்கள், ஜப்பானியர்கள் என்கிறோம்.”
”அதே போன்று இந்தியாவில் உள்ளவர்களை இந்துஸ்தானியர்கள் என்கிறோம்” என்றார்.
இலியாஸின் இந்த பேச்சு முஸ்லீம் அமைப்புகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பழமையான மசூதியான ஃபடேபுரி மசூதியின் இமாம், முஃப்தி அகமது, இலியாஸின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், புனிதக் குரானில் இப்படி எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை என்று கூறு இந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முஃப்தி அகமது.

No comments:

Post a Comment