பவர் ஸ்டார் என்றாலே காமெடிக்கும், சர்ச்சைக்கும் பஞ்சம் இருக்காது என்று சொல்லலாம். அதேபோல் கூட்டத்துக்கும் பஞ்சம் இருக்காது. மேடையில் இவர் பேசுவதை ரசிக்கவே (கலாய்க்க) ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிதான் சமீபத்தில் தொப்பி படவிழாவில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டார் நம்ப பவர்.
‘மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா தற்போது ‘தொப்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். முரளி ராம் ஹீரோவாக நடிக்க, ரக்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மலையோர கிராமங்களில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழர் ராம் பிரசாத் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விமல்,பவர் ஸ்டார் சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் டி.சிவா, பி.எல்.தேனப்பன், ராதாகிருஷ்ணன், விஜயமுரளி, மற்றும் இயக்குநர்கள் ஜி.என்.ரங்கராஜன், கே.பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், சீனுராமசாமி, சிங்கம் புலி, என பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துக்கொண்டு பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் மேடையிலேயே தன் கஷ்டங்களை குமுறியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தப் படத்திற்கு‘‘தொப்பி’ என்று பெயர் வைத்துள்ளனர். எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு காலத்தில் நான் நிறைய பேருக்கு தொப்பி போட்டுள்ளேன் (செக் மோசடி...).
ஆனால் இப்போது எனக்கே எல்லோரும் தொப்பி போடுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்காக முதலில் செக் கொடுக்கிறார்கள். செக் கொடுத்தவனுக்கே செக்கா என்று கேட்டால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த செக் எல்லாம் செல்லுபடியாவதில்லை.
செக் கொடுத்தவனுக்கே இந்த கதி... பாருங்கள். கொடைக்கானல் போன்ற உயரமான மலையில் கடும் குளிரில் பலமுறை கஷ்டப்பட்டு நடித்த பின் சம்பளம் கேட்டால் எனக்கு தொப்பி போடுகிறார்கள் (ஏமாத்தி விடுகிறார்கள்). பாருங்க, என்னை திருந்தி வாழவே விடமாட்டார்கள் போல தெரிகிறது. இப்போது நல்லதற்கு காலம் இல்லை. எனவே இந்த படத்திற்கு ‘தொப்பி’ என்பது நல்ல தலைப்பு’’ என்று பவர் ஸ்டார் பேசியதும் விழா அரங்கமே அதிரும் விதமாக பலத்த கைத்தட்டல்..
No comments:
Post a Comment