ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’.வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை சமீபத்தில் ரியல் இமேஜ் பிரிவியூ அரங்கில் பார்த்துள்ளார் அஜித். அவருடன் அவருடைய மனைவி ஷாலினியும் சேர்ந்து பார்த்துள்ளார்.
மொத்தம் 2 மணி 56 நிமிடங்கள் ஓடுகிறதாம் என்னை அறிந்தால் படம். படத்தை பார்த்த அஜித் சிறிது நேரம் கழித்து கௌதம் மேனன் மற்றும் சக நடிகர்கள், படக்குழுவினர்கள் என அனைவரையும் பாராட்டியுள்ளார். மேலும், தனக்கு படம் மிகவும் பிடித்ததாகவும், இப்படம் தன் வாழ் நாளில் மிகவும் ஸ்பெஷலான படம் என்று அவர் கூறியதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்னை அறிந்தால் படம் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 400 அரங்குகளும் மேலும், உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியாகிறது இந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் 95 அரங்குகளில் வெளியாகிறுது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment