கடந்த வாரம் நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ள இசை, எஸ் ஏ சந்திரசேகரின் டூரிங் டாக்கிஸ், தரணி, கில்லாடி, புலன் விசாரணை 2 ஆகிய படங்கள் வெளிவந்தன.
இதில் இசை படம் மட்டுமே ஓரளவிற்கு நல்ல வசூலை குவித்து வருகின்றது. இந்த வாராம் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸாவதல் இந்தப் படங்களுக்கு பெரிதாக வசூல் இருக்காது என்று கருதப்படுகிறது. மேலும், பொங்கலுக்கு வெளியான ஐ, டார்லிங், ஆம்பள ஆகிய படங்கள் இன்றும் வசூலை வாரி குவித்து வருகிறது.
தற்போது சென்னை நகர பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த இசை மூன்றே நாட்களில் ரூ 26 லட்சம் வசூல் செய்துள்ளது. ஐ படம் தற்போது வரை ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. டார்லிங் ரூ 1.11 கோடி வசூல் செய்து ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. ஆம்பள நல்ல ஓபனிங் இருந்தும் தற்போது ரூ 1.47 கோடி தான் வசூல் வந்துள்ளது.
No comments:
Post a Comment