Tuesday, 3 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 3)


பிப்ரவரி 03
1969
தமிழகத்துக்கு இந்தியை ஒழித்து தமிழ் ஆட்சிமுறையைக் கொண்டு வந்த அறிஞர் அண்ணா நினைவு தினம்..!!
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அழைக்கப்பட்டார். அண்ணா, காஞ்சீபுரத்தில், 1909, செப்டம்பர் 15ல் நடராசன், பங்காரு அம்மாள் என்பாருக்கு பிறந்தார்.
இவரது தந்தை ஒரு கைத்தரி நெசவுத் தொழிலாளி. சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். இந்திய சுதந்திரத்திற்கு பின் முதன்முதலில் ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
அறிஞர் அண்ணா சிறந்த சொல் வீரர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களை எழுதி, இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் உள்ளார்.
தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிட கழகத்தில் இணைந்து, சாதி மதங்களற்ற சமுதாயத்திற்காக பாடுபட்டார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக, பெரியாரின் திராவிட கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியை தோற்றுவித்தார். ஆளுங்கட்சியான காங்கிரசை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார்.
தமிழ் நாட்டில், இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மும்மொழி ஆட்சியை மாற்றியமைத்து தமிழ் ஆங்கிலம் என இரு மொழி ஆட்சியாக மாற்றியவர் இவரே. மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார் அண்ணா.
மக்களின் பேராதரவுடன் இரண்டு ஆண்டுகள் செம்மையாக ஆட்சி புரிந்த இவர், புற்றுநோய் தாக்கத்தால் 1969, பிப்ரவரி 3ல் மரணமடைந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள் பங்கேற்ற, இந்நிகழ்வு கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெரினா கடற்கறையில் பேரறிஞர் அண்ணாவை புதைத்த இடம் அவரது நினைவாக, அண்ணா சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இவரை நினைவு கூறும் விதமாக இவர் வாழ்ந்த காஞ்சீபுரம் இல்லத்தை அண்ணா நினைவு இல்லமாக மாற்றியுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோட் சாலை அண்ணா சாலை என பெயரிடப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.
இன்றைய சிறப்பு தினம்
1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.
1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. 1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.
இன்றைய சிறப்பு தினம்
மாவீரர் தின (மொசாம்பிக்)
செட்சுபுன் (Setsubun) (ஜப்பான்)
படைவீரர் தினம் (தாய்லாந்து)

No comments:

Post a Comment