நடிகைகளிலேயே ரசிகர்களை ‘ஹாய் மச்சான்’ என்று அழைத்து ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்து வருபவர் நடிகை நமீதா.
விஜயகாந்துக்கு ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நமீதா அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் கவர்ச்சி குயினாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாகவும் திகழ்ந்து வந்தார்.
ஆனால் கடந்து சில வருடங்களாக அவர் உடம்பு ரொம்ப குண்டானதால் சினிமாவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அதனால் கலை நிகழ்ச்சிகளிலும், நகை கடை, ஜவுளிக்கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். இதற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர்.
சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இதில் நடனமாடுவதற்கு நமீதாவிற்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக ஒதுக்கப்பட்டது. ஆனால், அக்கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பிறகு பேசிய தொகையை நமீதாவுக்கு கொடுக்கப்படவில்லை.
நிகழ்ச்சி நடத்தியவர்களிடம் கேட்டப்போது மேனேஜரிடம் கொடுத்துவிட்டதாக கூறினார்களாம். அதைத்தொடர்ந்து நமீதா மேனேஜரை போனில் தொடர்ப்புக்கொண்டார். ஆனால் போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் நமீதா அதிர்ச்சி அடைந்தார். மேனேஜரை நேரில் பார்க்க சென்றும் பார்க்க முடியவில்லை. அவர் பணத்துடன் தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நமீதா கூறும்போது, "நடன நிகழ்ச்சிக்கு எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். சக நடிகைகளும் இதுபோல் ஏமாறக் கூடாது. பேசிய பணத்தை முன் கூட்டியே வாங்கி விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment