Tuesday, 17 February 2015

முகப்பரு தீர்வு தான் என்ன??


இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகப்பரு பிரச்சனை. இது ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் வரும் ஒரு பிரச்சனை.
நம் தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகபடியாக சுரக்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. எண்ணெய் வழியும் முகத்தில் தூசு படரும் போது, அது முகத்தில் உள்ள வியர்வை துளைகளை அடைத்து விடுகிறது. இதன் காரணமாக அந்த துளை வழி வெளிவர முடியாத எண்ணெய்யானது அதிகமாக சேர்ந்து சேர்ந்து நாளைடைவில் பருவாக மாறுகிறது.
ஏற்கனவே வந்த பருக்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது. இதற்கு பல வழிகள் வந்துவிட்டது.
பரு வராமல் தடுக்க சில வழிகள் இங்கு காணலாம்…
முகத்தில் எந்த ஒரு க்ரீம் பூசினாலும் 20 நிமிடங்களுக்கு மேல் வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அதில் தூசு ஒட்டிக் கொள்ள நீங்களே வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
குறைந்தது மூன்று முறையாவது தினமும் சோப்பு போட்டு மிதமான சூடுடைய வெண்ணீரில் கழுவ வேண்டும். சந்தனம் உள்ள சோப்பு மிகவும் நல்லது. அதேபோல அடிக்கடி வேறு வேறு சோப்புகளுக்கு மாறக்கூடாது.
முகம் துடைப்பதற்கு தனியாக டவல் பயன்படுத்தலாம்.
ஆயில் ஃபேஸ் உள்ளவர்கள் பவுடர், முகத்தில் அழகூட்டும் க்ரீம் பயன்படுத்துவது சிறந்த யோசனை அல்ல. அதுவும் முக பருவுக்கு காரணமாக அமையும்.

No comments:

Post a Comment