Wednesday, 4 February 2015

காரில் இருந்து ரசிகரை அடிக்க ஓடிய சல்மான் கான்.. (வீடியோ)


பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். தற்போது பஜ்ரங்கி பைஜான் படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் சல்மான் கான் தனது காரில் சென்றுக்கொண்டிருந்த போது அவரை அடையாளம் கண்டுக்கொண்ட ரசிகர்கள் பைக்கில் சென்றப் படியே அவரை வீடியோ எடுத்தனர்.
இதை பார்த்த சல்மான் கான் காரை வேகமாக ஓட்டி அந்த ரசிகர்களை மடக்கினார். பிறகு காரிலிருந்து இறங்கி வருவதற்குள் அந்த ரசிகர்கள் ஓடிவிட்டனர். அப்போது அருகில் இருந்த பல ரசிகர்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துக்கொண்டு உற்ச்சாகத்தில் கத்தினர். பிறகு சல்மான் கான் கோபமாக காரில் ஏறிச்சென்றுவிட்டார்.
தற்போது இந்த வீடியோ தான் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேப்போன்று தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பைக்கில் போகும் போது அவர்கள் ரசிகர்கள் பின் தொடர்ந்து வீடியோ எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மானை கானை அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்த வீடியோ இதோ உங்களுக்காக கீழே...

No comments:

Post a Comment