ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ரிச்சர்ட் லக்னர், தனது 82 வது வயதில் மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் 1932 ஆம் ஆண்டு பிறந்த ரிச்சர்ட் லக்னர், நிர்மாணத்துறை மற்றும் பல்வேறு வர்த்தகத்துறையில் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியவர்.
இவர் ஏற்கெனவே 4 தடவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். அவரின் புதிய மனைவியான கெத்தி ஸ்மித்ஸுக்கு வயது 25 மட்டுமே. 57 வருட வித்தியாசம் கொண்ட இந்த ஜோடியினர், 7 மாத கால காதலின் பின்னர் திருமணம் செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் இத்திருமணம் நடைபெற்றது.
ஆனால், கடந்த வாரமே இவர்கள் இத்திருமணம் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். தனது புதிய மனைவி தனக்கு துரோகமிழைக்கக்கூடும் என தான் அச்சம் கொண்டுள்ளதாகவும் கோடீஸ்வரர்ரிச்சர்ட் லக்னர் தெரிவித்துள்ளர். 25 வயதான கெத்தி ஸ்மித்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த மாடல் ஆவார்.
பிளேபாய் இதழ் மாடலாகவும் பணியாற்றிய கெத்தி ஸ்மித்ஸ், ஜெர்மனிய தொலைக்காட்சியொன்றின் அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றினார். நான்காவது மனைவியை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் திருமணம் செய்துகொள்வ-தில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும் கெத்தி ஸ்மித்ஸ் தனது மனதை மாற்றமடையச் செய்துவிட்டார் என ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
"நான் நான்கு தடவை திருமணம் செய்தேன். இறுதியாக விவாகரத்து செய்து 7 வருடங்களின் பின்னரே கெத்தியை சந்தித்தேன். மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. ஆனால், கெத்தி எனது மனதை மாற்றிவிட்டார்" என்கிறார் ரிச்சர்ட்.
எவ்வாறெனினும், தனது மனைவி கெத்திக்கு தனது வங்கிக் கணக்கிலேயே அதிக ஆர்வம் இருக்கும் என தான் அச்சம் கொண்டுள்ளதாகவும் கூறும் ரிச்சர்ட், பெண்கள் அபாயகரமானவர்கள். ஆனால், நான் இளம் பெண்களுடன் சண்டையிடுவதற்கு விரும்புகிறேன்" என ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
தான் பணத்துக்காக கோடீஸ்வரர் ரிச்சர்டை திருமணம் செய்யவில்லை என்கிறார் கெத்தி. "இத்திருமணத்தின் மூலம் ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும். அது சிறப்பானதுதான். ஆனால், ஆடம்பர வாழ்க்கை எனக்கு மிக முக்கியமானதல்ல. நான் எனது சொந்த தொழில்சார் வாழ்க்கையை மேற்கொண்டேன்.
தொழில், காதல் ஆகிய இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என கெத்தி ஸ்மித்ஸ், தனது கணவர் ரிச்சர்ட்டுடன் இணைந்து அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இத்தம்பதியினர் இணைந்து அளித்த முதலாவது பேட்டி இதுவாகும்.
மேலும் ரிச்சர்ட் 4 தடவை திருமணம் செய்தவர். எனவே திருமண விசயத்தில் அவர் எனக்கு சிறந்த ஆசானாக இருப்பார் என்கிறார் கெத்தி. "நான் இதற்குமுன் இளைஞர்கள் சிலரை காதலித்துள்ளேன். ஆனால், அவர்கள் தம்மைப்பற்றி மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். கால்பந்தாட்டம் மற்றும் அதிக எண்ணிக்கையான பெண்களை அவர்கள் விரும்புகின்றனர்" எனவும் கெத்தி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வருடாந்தம் நடைபெறும் வியன்னா போல் எனும் நிகழ்வில் தான் கலந்துகொள்ளும்போது தன்னுடன் இணைந்து அவ்வைபவத்தில் பங்குபற்றுவதற்காக உலகப் புகழ்பெற்ற மாடல்கள், நடிகைகளுக்கு பணம் வழங்குபவராக அறியப்பட்டவர் ரிச்சர்ட் லக்னர்.
நடிகை பமேலா அண்டர்சன், கிம் கர்தாஷியன், பரிஸ் ஹில்டன் உட்பட பல பிரபலங்களை ரிச்சர்ட் தன்னுடன் மேற்படி விழாவுக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment