Wednesday, 4 February 2015

பழிவாங்கவே வீடியோ காட்சிகளை லீக் செய்தேன்.. அதிர்ச்சியில் அனுஷ்கா..!



சரித்திரப் படங்களை இயக்கவதில் புகழ் பெற்றவர் 'ராஜமெளலி’. இவர் தற்போது ’பாகுபலி’ என்ற சரித்திரப்படத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக இயக்கிவருகிறார்.
இதில்‘பிரபாஸ்’, ’அனுஷ்கா’, ’ராணா’ தமன்னா உட்பட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப் படுகிறது. இந்தப் படத்தை தான் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சமீபத்தில் இந்தப் படத்தின் 12 நிமிட காட்சியை யாரோ இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள். அதைக்கண்டு அனுஷ்கா, ராஜமெளலி உட்பட படக்குழுவினர் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ஆந்திர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் காட்சிகளை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இது தொடர்பாக வர்மா என்ற தொழில்நுட்ப கலைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. பழிவாங்குவதற்காகவே பட காட்சிகளை லீக் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி போலீசிடம் அவர் கூறும்போது, ‘பாகுபலி படத்துக்கான தொழில்நுட்ப பணியில் நான் இருந்தேன்.
ஆனால் பட நிறுவனம் என்னை நாகரீகமாக நடத்தவில்லை. அதற்கு பழிவாங்கவே காட்சிகளை லீக் செய்தேன். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்’ என்றார். இது குறித்து ராஜமெளலி உள்ளிட்ட பட குழுவினர் யாரும் பதில் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment