Wednesday, 4 February 2015

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாட்ஸாப்பில் வெளியிட்ட வாலிபர்கள்!!


இளைஞர்கள் 3 பேர், 15 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து யூடியூப் மற்றும் வாட்ஸாப்பில் வெளியிட்டுள்ள கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுடுத்தி வருகிறது.
கடந்த 15ம் தேதி, உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த எட்மாடவுல்லா என்ற பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் வெளியில் செல்வதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மூன்றுபேர், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்தக் கொடுமை பத்தாது என்று, அதனை வீடியோ எடுத்து யூடியூபிலும், வாட்ஸாப்பிலும் பரவவிட்டுள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னையும் குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர் அந்த கேடுகெட்டவர்கள்.
இவர்கள் மூவரும் சிறுமியின் சுற்றத்து வீட்டுக்காரர்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. ஒருகட்டத்தில் இதனை சகித்துக் கொள்ளாத சிறுமி, துனிந்து இவ்விவகாரத்தை தன் தந்தையிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட தந்தை உடனே இது குறித்து ஆக்ரா காவலர்களிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் நரேஷ், ஜெய்வீர், ராஜேஷ் என்ற அந்த மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலியே மேய்ந்தது போல, அந்நியர்களிடமிருந்து காக்க வேண்டிய, அக்கம் பக்கத்து வீட்டினரே, இவ்வாறு செய்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் கிளப்புவதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment