Wednesday, 4 February 2015

தாய் என்றால் பாலூட்டுவாள்... இவர் செய்திருக்கும் வேலையை பாருங்க…!


அமெரிக்காவில் உள்ள கென்டக் நகரில் வசித்து வரும் 27 வயதான லேசி பியர்ஸ் என்ற பெண்மணி, தனது 5 வயது மகனை கொல்வதற்கு பல வழிகளை இணையதளத்தில் தேடியுள்ளார்.
இறுதியில், உணவில் கலக்கும் உப்பை தொடர்ச்சியாக அதிக அளவு கொடுத்து வந்தால் மரணம் ஏற்படும் என்பதை தெரிந்துகொண்டு, தனது மகனுக்கு தினமும் அதிக அளவில் உப்பை கொடுத்து வந்துள்ளார்.
போலிஸிடம் சிக்கக்கூடாது என்பதற்காக, தனது மகனின் உடல்நிலை மோசமாகி வருகிறது என்று, அடிக்கடி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவந்துள்ளார்.
இதற்கிடையில், தனது மகனின் உடல்நிலை மோசமானபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஓவ்வொரு முறை குழந்தையை பரிசோதித்தபோது, உடலில் சோடியத்தின் (Sodium) அளவு கூடிக்கொண்டே சென்றதை கண்டுபிடித்த மருத்துவர்கள் தாயின் மீது சந்தேகப்பட்டனர்.
இந்நிலையில், டுவிட்டரில் ‘எனது செல்ல மகன் இன்று 23வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள் என்று பதிவை செய்துவிட்டு மருத்துவமனை சென்றுள்ளார்.
குழந்தையின் மூளையில் வீக்கம் ஏற்பட்டதால் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்தது. மேலும் மருத்துவ பரிசோதனையில், மகனின் வயிற்றிற்குள் பைப் வழியாக அதிக அளவு உப்பை செலுத்திவிட்டு, அங்கிருந்த அனைத்து தடங்களையும் அழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, அந்த பெண்ணின் தொலைபேசியை பரிசோதித்ததில், சந்தேகப்பட முடியாத அளவில் கொலை செய்வது எப்படி என இணையத்தளத்தில் தேடியிருந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.
அந்த பெண்ணிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், தன் மகனை கொன்றதை ஒப்புக்கொண்டார். 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment