தமிழ் சினிமாவில் போட்டி என்றால் அது அஜித், விஜய்க்கு தான். இதை அவர்கள் கருதுகிறார்களோ இல்லையோ.. ஆனால் அவர்களது ரசிகர்கள் இப்படிதான் நினைத்துகொள்கிறார்கள்.
இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் கூட நடக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யார் படம் அதிகமான வசூலை குவிக்கிறது என்பதையும் கவனித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் சென்னையில் கத்தி படத்தின் வசூலை முந்தவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், கத்தி படத்தின் வசூலை ஒப்பிடுகையில் இப்படம் கொஞ்சம் பின் வங்கியுள்ளதாம்.
தற்போது வந்த தகவலின் படி சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் இரண்டு வார முடிவில் என்னை அறிந்தால் ரூ 4.9 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆனால், கத்தி படம் இதே 2 வார முடிவில் ரூ 5.3 கோடி வசூல் செய்திருந்தது என்று கூறப்படுகிறது.
இதனால் கத்தி வசூல் சாதனையை என்னை அறிந்தால் படத்தால் முறியடிக்க முடியவில்லை என்று விஜய் ரசிகர்கள் சமூகத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment