Tuesday, 17 February 2015

செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்த இந்த நடிகை சொல்லும் 'ஐடியா’வ பாருங்க..?


பாலிவுட்டில் கவனிக்கதக்க நடிகையாக இருப்பவர் பரினீதி சோப்ரா. இவர் செக்ஸ் ஆசைகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று சில அறிவுரைகளை கொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு நடிகை இலியனா 'செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், செக்ஸ் மனிதனுக்கு இன்றியமையாதது மட்டுமின்றி சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒரே செயல் என்றும் மிகவும் தைரியமாக பேட்டி கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து தற்போது பரினீதி சோப்ரா தியானம், குளிர்ந்த நீரில் குளிப்பது போன்றவற்றின் மூலம் செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து பரினீதி சோப்ரா கூறுகையில், செக்ஸ் என்பது வயது வந்த எல்லோருக்கும் பொதுவான விஷயம். செக்ஸ் குற்றச்செயல் அல்ல. இதை சிலர் தவறாக பார்க்கின்றனர். பேசக் கூடாத விஷயமாகவும் கருதுகிறார்கள். எனக்கு இவற்றில் உடன்பாடு இல்லை. ஆனாலும் செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இந்த உணர்வுகளை அடக்க கூடிய கலை தெரியும்.
இளைஞர்களுக்கு அவர்கள் சாதிக்க வேண்டிய விஷயம் தான் முக்கியம். அதற்கு தான்முதலிடம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மற்றவை பற்றி சிந்திக்க வேண்டும். எல்லோரும் செக்ஸ் ஆசைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
தியானம் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்தால் செக்ஸ் ஆசைகள் வராது. நான் இப்படி செய்து தான் அதனை கட்டுப்படுத்துகிறேன் என்று பரினீதி சோப்ரா கூறினார்.

No comments:

Post a Comment