Tuesday, 17 February 2015

‘புலி’படத்தை பற்றி ’கிலி’யை ஏற்படுத்தும் கதைகள்...?


கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ’புலி’.
இப்படத்தை சிம்புதேவன் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். மேலும் நான் ஈ சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'புலி' படத்தின் கதை இதுதான் என வழக்கம் போல சிலர் எழுத ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது வந்துள்ள புதிய தகவல்களின்படி விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமாண்டர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் வேடங்களில் விஜய் நடித்து வருவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மூன்றாவது வேடத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளதாகவும், இந்த மூன்றாவது வேடம் இதுவரை விஜய் ரசிகர்கள் பார்க்காத புதுமையான கெட்டப்பாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் எழுதி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் விஜய் ஓவியராக நடிக்கிறார் என்றும் அவர் வரையும் ஓவியங்கள் அப்படியே உயிர் பெற்று அந்த ஓவியங்களுக்குள் ஒரு கதை உருவாகிறது என்றும் பரவி வருகிறது. இது அப்படியே 'ஜுமாஞ்சி' படக் கதை சாயலில் இருக்கிறது என்றும் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
கதை சொல்வதிலும், கதையை எழுதுவதிலும் நம்மவர்களை மிஞ்ச யாருமில்லை. இதில் எந்த கதை உண்மை என்று தெரியவில்லை. ஆனால் புலி படத்தின் கதை என்று வெளியிட்டு ரசிகர்களிடம் கிலியை மட்டும் ஏற்படுத்துகிறார்கள் என்பது மட்டும் உண்மை.


No comments:

Post a Comment