ஈராக்கின் பெரிய நகரங்களுள் ஒன்றான மொசூல் நகரத்தினை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்து, தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறனர்.
மேலும், அவர்களுக்கு ஏற்றது போல புது புது சட்டங்கள் போட்டு வருகின்றனர். அதில் செல்ஃபோனுக்கு தடை என்பதும் ஒன்று. தங்களைப் பற்றிய தகவலை யாரேனும் அமெரிக்காவிடம் கூறக்கூடும் என்பதற்காக இத்தகைய ஏற்பாடு.
இந்நிலையில் செல்ஃபோன் பயன்படுத்திய 5 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் அவர்களுக்கு சவுக்கடி வழங்கப் பட்டிருக்கின்றது. மேலும், காரணம் ஏதும் கூறாமல் 3 பெண்களின் கைகள் துண்டிக்கப்பட்டது.
அவர்களும் செல்ஃபோன் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment