ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமான ’DDLJ’. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை கஜோல் நடித்திருந்தார்.
1995ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சமீபத்தில் தனது ஆயிரமாவது வாரத்தினை கடந்தது. இதனை பெரிய விழாவாகவே கொண்டாடினர். ஷாருக்கான் கடைசியாக வெளிவந்த ஹாப்பி நியூ இயர் படத்திற்கு பிறகு, இயக்குனர் ரோகித் ஷெட்டியுடன் இணைய உள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஏதேனும் ஹிட் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று முதலில் செய்திகள் வெளியானது.
ஆனால், ரோகித் ஷெட்டி இந்த தகவலை முற்றிலும் மறுத்தார். தற்போது, இப்படத்திற்கு ‘தில்வாலே’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து ஷாருக்கானோ, ரோகித் ஷெட்டியோ ஏதும் கூறவில்லை.

No comments:
Post a Comment