பேங்க் அக்கவுண்ட் இல்லாம கூட இருக்காங்க, ஆனா ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஃபேஸ்புக் பிரபலமாகிவிட்டது. ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கும் சிறுவர்கள் முதல் ஃபேஸ்புக் பிரபலம்.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. என்னவென்று கேட்கின்றீர்களா??
அதாவது, இன்சூரன்ஸ் போடும் போது நாம் இறந்து விட்டால், அந்த பணம் யாரைச் சேர வேண்டும் என்று ‘Nominee’ வசதி உள்ளதல்லவா?? அது போல, நாம் இறந்த பிறகு நமது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியுமாம்.
இது என்ன பெரிய விஷயம் ‘ஐடி’ பாஸ்வேர்ட் தெரிந்தால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமே என்கின்றீர்களா?? அதுதான் இல்லை, அந்த அக்கவுண்ட்டுக்கு உரியவர் இறந்து விட்டால் அவரது பெயரின் பின்னால், ‘ரிமெம்பரிங்’ என்ற வாசகம் இணைக்கப்படுமாம். இதனால், அவர் இறப்பதற்கு முன் யாரை நிர்வாகியாக நியமித்துள்ளாரோ அவர்தான் அதனை நிர்வகிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment