வித்தியாசமான ஆடைகள் அணிந்து, பாப் பாடல் பாடுவதில் மிகவும் பிரபலமானவர் லேடி காகா (lady gaga). தன் முதல் பியானோ பாடலிசையை 13 வயதில் எழுதி, 14 வயதில் பொது மேடைகளில் பாடத் தொடங்கிய இவர் தற்போது உலகப்புகழ் பெற்ற பாப் பாடகியாக விளங்கி வருகிறார்.
இவர் கடந்த சில வருடங்களாக தனது பாய் பிரண்டான டெய்லர் கின்னி (Taylor Kinney)என்பவரை காதலித்து வந்தார். டெய்லர் கின்னி ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்ததுடன், மாடலாகவும் இருக்கிறார். சமீபத்தில் லேடி காகா தனது காதலருடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் இவர்களுடைய திருமணம் விரைவில் நடைப்பெறும் என்று அப்போது ஹாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த கடந்த சனிக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக லேடி காகாவுக்கு இதய வடிவம் கொண்ட வைர மோதிரம் அணிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை உறுதி செய்த டெய்லர், இந்த விஷயத்தை நாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும், வெளிப்படையாக இந்த விழாவை கொண்டாடவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment