யுனிசாஃப்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆக்ஷன் கேம்களில் ஒன்றான ‘Assassin’s creed’ கேமை திரைப்படமாக்க ஃபாக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புகழ்பெற்ற கம்ப்யூட்டர் கேமான ‘Assassin’s creed’ ஐ திரைப்படமாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
இப்படத்தினை வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.இப்படத்தினை 20யத் ஃபாக்ஸ் சென்சுரி நிறுவனம், நியூ ரிஜென்ஸி நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கின்றது.
இப்படத்தில் ‘Assassin’s creed’ கதாபாத்திரத்தில் ’எக்ஸ் மேன் – ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தில் மக்னிட்டோ கேரக்டரில் நடித்த Michael Fassbender நடிக்கின்றார். இவருடன் ‘த டார்க் நைட் ரைசஸ்’ படத்தில் வில்லியாக மிரட்டிய Marion Cotillard நடிக்கின்றார். இப்படத்தினை ஜஸ்டீன் இயக்குகின்றார்.

No comments:
Post a Comment