முதன் முறையாக இணைந்த அஜித்-கெளதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவதுடன் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக சமீபத்தில் ஒரு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கெளதம் மேனன் 'என்னை அறிந்தால்' படப்பிடிப்பின் போது நடைபெற்ற மறக்க முடியாத சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, ஒரு முறை தனக்கே தெரியாமல் அஜித் தன்னுடைய வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், ஒரு பெரிய மாஸ் ஸ்டார் என்ற கர்வம் இல்லாமல் வெகு இயல்பாக அவர் பேசியதை தனது தாயார் பெருமையாக தன்னிடம் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
அடுத்தவர்களின் வீட்டிற்கு சென்றால் அரைமணி நேரத்தில் அந்த வீட்டில் இருந்து எப்படி கழன்று கொள்வது என்று நானே பல சமயங்களில் நினைத்துள்ளேன். ஆனால் என்னுடைய வீட்டில் எனது தாயாரிடம் எவ்வித சங்கடமும் இன்றி அவர் ஒன்றரை மணி நேரம் இருந்ததை எண்ணி வியப்படைந்தேன்' என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment