ஹாங்காங்கில் யோகா பயிற்ச்சியாளராக வாழ்ந்து வரும் யோகராஜ் என்பவர், தொடர்ந்து 40 மணிநேரங்கள் யோகாசனம் செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யோகா பயிற்ச்சியாளரான யோகராஜ், ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார். 5 வயது முதலே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வரும் யோகராஜ், தன் 12வது வயதில் இருந்தே யோகா கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.
தொடர்ந்து 40 மணி நேரம் 1,500 ஆசனங்களை செய்து காட்டியுள்ளார் யோகராஜ். மேலும், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இதற்காக, மோடியைச் சந்தித்து பேசப் போவதாகவும் கூறியுள்ளார்.
இவருக்கு, பிரதமர் மோடி டுவிட்டர் மூலம், “கின்னஸ் சாதனை படைத்த யோகராஜுக்கு எனது வாழ்த்துக்கள். யோகாவை ஹாங்காங்கில் பிரபலமடையச் செய்தும், யோகராஜுக்கு ஆதரவும் அளித்து வரும் இந்திய தூதரகத்தை நான் பாராட்டுகிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment