இந்தியாவின் தலைசிறந்த இந்துத்துவ இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். இந்த மகாபாரதத்தை முழுவதுமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரிட்டனில் வசித்து வரும் இந்திய இளைஞர் சிந்து ஸ்ரீதரன்.
முன்னாள் பத்திரிகைச் செய்தியாளரான இவர், பிரிட்டனின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் இதழியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டுவிட்டரில், எபிக் ரீடோல்ட் (Epic Retold), என்ற பெயரில் 2,700 டுவீட்டுகளாக பதிவிட்டுள்ளார் சிந்து ஸ்ரீதரன்.
இந்த டுவீட்டுகளை மொத்தமாக முடிக்க ஸ்ரீதரனுக்கு 4 ஆண்டுகள் பிடித்ததாம். மேலும், டுவிட்டரில் பதித்துள்ள மகாபாரதப் பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாகவும் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ளார்.
இதற்கு அடுத்த படியாக, மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கதாபாத்திரத்தின் பார்வையில், கதையை திருப்பி, டுவிட்டரில் பதிவிக்க இருப்பதாகவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

No comments:
Post a Comment