இனிப்பு பலகாரம் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு இனிப்பிற்கு நாம் அடிமை. அதிலும் திகட்டாத இனிப்பு பலகாரத்தினை தான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி ஒன்றுதான் சோன் பப்டி..
அதிகம் திகட்டாத சோன் பப்டியை பொதுவாக கடையில் வாங்கிதான் சாப்பிடுவார்கள். ஆனால் இதனை எளிதாக வீட்டிலேயே செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?? தெரியாது என்றால் எப்படி செய்யலாம் எனபதை தெரிந்து கொள்ளுங்கள்…
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 ½ கப்,
மைதா மாவு – 1 ½ கப்,
சர்க்கரை – 2 ½ கப்,
தண்ணீர் – 1 ½ கப்,
பால் – 2 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் பவுடர் – டீஸ்பூன்,
நெய் – 250 கிராம்.
செய்முறை: மைதா மற்றும் கடலை மாவுகளை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பாத்திரத்தில் நெய் உற்றி சூடானதும், மாவை போட்டு கிளறவும். லேசான பொன்னிறமானதும் அதனை இறக்கி குளிர வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் தண்ணீரை உற்றி, சர்க்கரை பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பாகு கெட்டியானதும் இறக்கி குளிர வைக்கவும்.
குளிர வைத்த மாவு கலவை மற்றும் சர்க்கரை பாகு இரண்டையும் தட்டில் கொட்டி ஒரு கரண்டி கொண்டு கிளறவும்.
கிளறும் போது, நீளநீளமாக திரண்டு வரும். அதனை ஒரு தட்டில் நெய் தடவி அதில் உற்றவும்.
அதன் மீது ஏலக்காய் பவுடரை தூவி குளிர வைக்கவும்.
பின்னர் விருப்பப் பட்ட வடிவில் கட் செய்து, பாதாம் மற்றும் பிஸ்தாவை அலங்கரித்து பரிமாறவும்.

No comments:
Post a Comment