மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மஞ்சு வாரியர். பிரபல நடிகர் திலீப்பை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 16 வருடங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திய இவர்கள் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீசியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர்.
இரு நாட்களுக்கு முன்புதான் கோர்ட், அவர்களுக்கு விவகாரத்து வழங்கியது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் மன்சு வாரியர்.
மலையாளத்தில் அவர் நடித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு' படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் ஜோதிகா நடிக்க ரீமேக் ஆகி உள்ளது. சூர்யா தயாரித்துள்ள இப்படம் விரைவில் இது ரிலீசாக உள்ளது. ஹவ் ஒல்டு ஆர் யு படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு சூர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அவர் தயாரிக்க உள்ள படத்தில் மஞ்சு வாரியரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

No comments:
Post a Comment