இந்த ஆண்டில் அதிக படங்கள் நடிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நய்யாண்டி, மரியான் எனறு தொடர் தோல்விகளை கொடுத்தாலும் அண்மையில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் அவரை உச்சத்தில் உட்கார வைத்தது.
அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது பாலாஜி மோகன் இயக்கும்''மாரி'' படத்தில் நடித்து வரும் தனுஷ், அதற்கு அடுத்தப்படியாக மீண்டும் வேல்ராஜ் இயக்கும் படத்திலும், அதன்பின் பிரபுசாலமன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தமிழ் திரையுலகில், தரமான இயக்குநர்கள், திறமையான இயக்குநர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக மணிரத்னம் பெயர் இடம்பெற்றிருக்கும். இன்னும் சொல்லப்போனால் இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் இயக்கும் புதிய படத்தில் தான் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
தற்போது, ''ஓ.கே. கண்மணி'' என்ற படத்தை இயக்கி வருகிறார் மணி ரத்னம். விரைவில் இப்படம் வௌியாக உள்ளது. அதற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment