Wednesday, 4 February 2015

அனைத்து தமிழ் படங்களின் ரெக்கார்டையும் முறியடித்த என்னை அறிந்தால்..!


பிப்ரவரி 5 ஆம் தேதி அதாவது நாளை முதல் தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவிருக்கிறது என்னை அறிந்தால் படம்.
இப்படத்தை முதல் நாளே பார்ப்பதற்கு ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகி சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் என்னை அறிந்தால் படம் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவொரும் சாதனையாக கூறப்படுகிறது. ஏனென்றால் இதுவரை அஜித் நடித்த படங்கள் உலகம்மெங்கும் 1000 தியேட்டர்களைக் கூட எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும், இலங்கையிலும் என்னை அறிந்தால் படம் ஒரு சாதனை படைத்திருக்கிறது. அதாவது இலங்கையில் இதுவரை கத்தி, ஐ, லிங்கா படங்களே அதிக திரையரங்குகளில் வெளிவந்த படங்கள். தற்போது என்னை அறிந்தால் அங்கு 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வருகிறது. இதன் மூலம் அனைத்து தமிழ் படங்களின் ரெக்கார்டையும் முறியடித்து என்னை அறிந்தால் சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment