அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான செலீனா கோமஸ், வி மேகஸின் என்னும் நாளிதழுக்காக டாப்லெஸ் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
22 வயதான செலீனா கோமஸ் தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தாலும், இனிமையான குரலாலும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்காண ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். சமீபத்தில் இவர் பாடகர் ஜஸ்டின் பைபரை கழட்டிவிட்டு டி.ஜே. கலைஞரும் பாடல் பதிவாளருமான செல்டனாவை காதலித்து வருகிறார் என்று கிசுகிசுப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர் வி மேகஸின் என்னும் நாளிதழுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். ஹாலிவுட்டில் நடிகைகள் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த போட்டோ ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது இந்த புகைப்படத்தில் செலீனாவின் அப்பாவித்தனமான பார்வையும் , அவரின் முடி அலங்காரமும் அவர் வயதை மிகவும் குறைத்துக் காட்டுகிறதாம் . இதில் அவர் 13 வயது குழந்தையைப் போல இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனராம்.

No comments:
Post a Comment