அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலாளராக, ஆஷ்டன் கார்டர் தெரிவு செய்யப்பட்டு, விர்ஜீனியாவில் உள்ள பெண்டகனில் பதவியேற்றுக் கொண்டார். ஆஷ்டன் கார்டரின் பதவியேற்பு விழாவிற்கு, அவரது மனைவி, ஸ்டிஃபேனி கார்டரும் வந்திருந்தார்.
உலக அளவில் மிகப் பெரிய ராணுவப் பொறுப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அமெரிக்காவின் துனை அதிபர் ஜோ பிடெனும் இவ்விழாவில் பங்கேற்றிருந்தார்.
உலகமே உத்துப் பார்த்துக் கொண்டிருந்த இவ்விழாவில் துனை அதிபர் ஜோ பிடென் பலான பல வேலை ஒன்றை செய்துவிட்டார். இந்த வேலை, புகைப்படமாகவும், வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டு வருகிறது.
அதாவது, புதிய பாதுகாப்புத் துறைச் செயலாளராக பதவியேற்ற ஆஷ்டன் கார்டர், உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி ஸ்டிஃபேனியும் அருகில் நின்றிருந்தார்.
இந்த சமயத்தில், துனை அதிபர் ஜோ பிடென், ஸ்டிஃபேனியின் பின்புறம் நின்றவாறு, அவரது தோள் மீது கைவைத்து, அவரது கழுத்தையும், தலை முடியையும் சுமார் 20 நொடிகளுக்கு முகர்ந்து பார்த்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஊடகங்களின் கேமிராக்களில் பதிவாகி வெளியாகின. இதைக் கவணித்த சமூக தளவாசிகள் இவரை வைத்து ஓட்ட ஆரம்பத்து விட்டனர். இப்போதைக்கு, அமெரிக்க ஃபேஸ்புக் வெறியர்களுக்கு தீனி போடும் விஷயமாகிவிட்டது.

No comments:
Post a Comment